பிரதமர் அலுவலகம்
டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் தில்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்களின் ஐந்தாவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்.
மாநாட்டின் முதன்மை கருப்பொருள்: வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனித வளம்
விவாதத்திற்கான முக்கியப் பகுதிகள்: ஆரம்பகால குழந்தைப் பருவம் கல்வி, பள்ளிக் கல்வி, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விளையாட்டு மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
26 DEC 2025 11:06AM by PIB Chennai
மாநிலங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல்; நிர்வாகத்தில் தொழில்நுட்பம்; அக்ரிஸ்டாக்; ஒரு மாநிலம், ஒரு உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலம்; தற்சார்பு இந்தியா, சுதேசி மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்குப் பிந்தைய எதிர்காலத்திற்கான திட்டங்கள் குறித்து சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட உள்ளன.
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் தில்லியில் நடைபெறும் தலைமைச் செயலாளர்களின் ஐந்தாவது தேசிய மாநாட்டிற்குத் தலைமை தாங்குகிறார். தேசிய வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்த கட்டமைக்கப்பட்ட மற்றும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம் மத்திய-மாநில கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு மற்றொரு முக்கிய மைல்கல் நடவடிக்கையாகும்.
கூட்டுறவுக் கூட்டாட்சி குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்த மாநாடு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒத்துழைத்து, இந்தியாவின் மனித வள ஆற்றலை அதிகப்படுத்துவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை வடிவமைக்கும் ஒரு மன்றமாகச் செயல்படுகிறது.
2025 டிசம்பர் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, ஒரு பொதுவான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட தீவிர விவாதங்களுக்காக அர்ப்பணிக்கப்படும். இது இந்தியாவின் மக்களை வெறும் மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் பார்ப்பதிலிருந்து மாறி, கல்வி அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் எதிர்காலத்திற்குத் தயாரான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உறுதியான உத்திகளை உருவாக்கவும், அதன் மூலம் மக்களை மனித வளமாக நிலைநிறுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளுக்கும் இது வழிவகுக்கும்.
மத்திய அமைச்சகங்கள்/துறைகள், நித்தி ஆயோக், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுக்கு இடையேயான விரிவான விவாதங்களின் அடிப்படையில், ஐந்தாவது தேசிய மாநாடு 'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனித வளம்' என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தும். இது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த நடைமுறைகள் மற்றும் உத்திகளை உள்ளடக்கியது.
இந்த முதன்மை கருப்பொருளின் கீழ், ஆரம்பகால குழந்தைப் பருவ கல்வி, பள்ளிக் கல்வி, திறன் மேம்பாடு, உயர்கல்வி, விளையாட்டு மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் ஆகிய ஐந்து முக்கியப் பகுதிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவை விரிவான விவாதத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாநிலங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல்; நிர்வாகத்தில் தொழில்நுட்பம்: வாய்ப்புகள், அபாயங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள்; ஸ்மார்ட் விநியோகச் சங்கிலி மற்றும் சந்தை இணைப்புகளுக்கான அக்ரிஸ்டாக்; ஒரு மாநிலம், ஒரு உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலம்; தற்சார்பு பாரதம் மற்றும் சுதேசி, மற்றும் இடதுசாரி தீவிரவாதத்திற்குப் பிந்தைய எதிர்காலத்திற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படும்.
மேலும், பாரம்பரியம் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்தல் மற்றும் டிஜிட்டல்மயமாக்குதல், அனைவருக்கும் ஆயுஷ் – முதன்மை சுகாதார சேவையில் அறிவை ஒருங்கிணைத்தல் ஆகிய தலைப்புகளில் சிறப்பு விவாதங்கள் நடைபெறும்.
மாநில தலைமைச் செயலாளர்களின் தேசிய மாநாடு கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதல் மாநாடு ஜூன் 2022-ல் தரம்சாலாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜனவரி 2023, டிசம்பர் 2023 மற்றும் டிசம்பர் 2024 ஆகிய மாதங்களில் புதுதில்லியில் அடுத்தடுத்த மாநாடுகள் நடைபெற்றன.
இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.
***
AD/PKV/SE
(रिलीज़ आईडी: 2209021)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam