தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாமனிதர் மாளவியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகளின்’ இறுதித் தொகுப்பை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 25 DEC 2025 6:14PM by PIB Chennai

பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜி-யின் பிறந்த தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற விழாவில், “மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகளின்” இறுதித் தொகுப்பை (தொகுதிகள் 12 முதல் 23 வரை) குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியை, மாமனிதர் மாளவியா மிஷன் மற்றும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு இணைந்து நடத்தின. இது பெரிய அளவிலான இருமொழி வெளியீட்டுத் திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. 12 தொகுதிகளைக் கொண்ட இந்த இறுதி தொகுப்பு, பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2023 - ம் ஆண்டு டிசம்பர் 25 -ம் தேதி வெளியிடப்பட்ட 11 தொகுதிகளைக் கொண்ட முதல் தொடரை அடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவவரின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், நாடு முழுவதிலுமிருந்து அசல் ஆவணங்களை ஆராய்ச்சி செய்து தொகுப்பதை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த இரண்டாவது தொடரில், தொகுக்கப்பட்ட சுமார் 3,500 பக்க ஆவணங்கள் மூலம் மாமனிதரின் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை குறித்த ஒரு தெளிவான பார்வையை வழங்குகிறது.

இந்தத் தொகுப்பின் ஒரு முக்கிய அம்சம், மத்திய சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய 200 உரைகள் அனைத்தையும் உள்ளடக்கியிருப்பதாகும், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவரது மேதமையைப் பறைசாற்றுகிறது. இந்தத் தொகுதிகள், இந்தியத் தொழில்துறை ஆணையத்தின் உறுப்பினராக, நாடு முழுவதிலுமிருந்து 135 தொழிலதிபர்களுடன் நடத்திய நேர்காணல்களின் அரிய மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பதிவையும் வழங்குகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208542&reg=3&lang=1     

***

AD/SV/RK


(रिलीज़ आईडी: 2208599) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Telugu