சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்எச்ஏஐ-யின் ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது

प्रविष्टि तिथि: 24 DEC 2025 5:07PM by PIB Chennai

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிதியுதவி செய்யப்படும் ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி ) இருந்து உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையாக  ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த பொது நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைச் சொத்துக்களின் பணமாக்கல் திறனை வெளிக்கொணர்வதையும்சில்லறை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை முதன்மையாகக் குறிவைத்துஉயர்தரநீண்ட கால முதலீட்டை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்டின்  முதலீட்டு மேலாளராக ராஜ்மார்க் இன்ஃப்ரா இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்  பார்த ஸ்டேட் வங்கிபஞ்சாப் நேஷனல் வங்கி,  ஆக்சிஸ் வங்கிபஜாஜ் ஃபின்சர்வ் வென்ச்சர்ஸ் லிமிடெட்எச்டிஎப்சி வங்கிஐசிஐசிஐ வங்கி,  ஐடிபிஐ வங்கிஇண்டஸ்இண்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டுடன் ஒரு கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை ஆணையத்தின் உறுப்பினர் (நிதி)திரு. என்.ஆர்.வி.வி.எம்.கே. ராஜேந்திர குமார்இந்த முதலீட்டு மேலாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் (கூடுதல் பொறுப்பு) இருப்பார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208143&reg=3&lang=1

***

TV/PKV/SE


(रिलीज़ आईडी: 2208276) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी