பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ம் ஆண்டு ஆய்வறிக்கை: திறன் மேம்பாட்டு ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 24 DEC 2025 3:54PM by PIB Chennai

திறன் மேம்பாட்டு ஆணையம், மிஷன் கர்மயோகியின் செயலாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இந்தியாவின் குடிமைப் பணி அமைப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

2025-ம் ஆண்டில், ஆணையம் மாநிலங்களை அணுகுவதில் ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையில் கவனம் செலுத்தியது. செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி, மாநிலத் துறைகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்  மூலம் திறன்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். கூடுதலாக, ஆணையம் புதிய பரிமாணங்களை உள்ளடக்கி, பயிற்சி நிறுவனங்களுக்கான தனது அங்கீகாரக் கட்டமைப்பைப் புதுப்பித்தது. 'ராஷ்ட்ரிய கர்மயோகி ஜன சேவா திட்டம்' மூலம் சேவை மனப்பான்மையில் வழங்கப்படும் நடத்தை சார்ந்த பயிற்சி இந்த ஆண்டின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். மேலும், களத் திறன்களை இலக்காகக் கொண்டு, களப் பகுதிகளில் புதிய படிப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

2025-ம் ஆண்டில், ஆணையம் பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்து குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

* மாநிலங்களில் மிஷன் கர்மயோகி:

* மூன்று மாநிலங்கள் உள்ளடக்கப்பட்டன, மேலும் 2026 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் 15 மாநிலங்கள் உள்ளடக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

* 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களுக்கென பிரத்யேக திறன் மேம்பாட்டுத் திட்டங்களை  உருவாக்குவதை எளிதாக்கும் வகையில், திறன் மேம்பாட்டு ஆணையம் மாநிலங்களுடன் ஒரு கட்டமைக்கப்பட்ட ஈடுபாட்டைத் தொடங்கியது. 2025 செப்டம்பர் 24-25 தேதிகளில் இரண்டு நாள் தேசியப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் 17 மாநிலங்கள் மற்றும் நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களின்  பிரதிநிதிகள் பங்கேற்றனர். இது செயற்கை நுண்ணறிவு வசதி கொண்ட திறன் மேம்பாட்டுக்  கட்டமைப்பைச் சோதித்து சரிபார்க்க உதவியது. இதைத் தொடர்ந்து, மாநில நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, பிரத்யேக திறன் மேம்பாட்டு கட்டமைப்புகளைத் தயாரித்து சரிபார்ப்பதற்காக மாநில அளவிலான பயிலரங்குகள் நடத்தப்பட்டது.

2025 டிசம்பரில், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கரில் பயிலரங்குகள் நடத்தப்பட்டன. மேலும், 2026 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் 15 மாநிலங்களை உள்ளடக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு ஆணையம் இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது மாநில அளவில் மிஷன் கர்மயோகியை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதை சாத்தியமாக்குகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் கூட்டுத் திட்டமிடல், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் திறன் அடிப்படையிலான, பங்கு சார்ந்த திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒரு கட்டமைப்பை வழங்குகின்றன.

 இந்தத் திட்டம் ஜனவரி 2025-ல் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, திரிபுரா, ராஜஸ்தான், அருணாச்சல பிரதேசம், டெல்லி, சண்டிகர், சத்தீஸ்கர், மணிப்பூர், நாகாலாந்து, கோவா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

திறன் மேம்பாட்டு ஆணையம், 16,000 முதன்மைப் பயிற்றுநர்கள் மற்றும் 822 முன்னணிப் பயிற்றுநர்களின் ஆதரவுடன், ராஷ்டிரிய கர்மயோகி ஜன சேவா திட்டத்தின் கீழ் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு வெற்றிகரமாகப் பயிற்சி அளித்துள்ளது.

அரசு ஊழியர்களிடையே சேவை மனப்பான்மையை மீண்டும் தட்டியெழுப்பும் நோக்குடன், இத்திட்டத்தின் முதல் கட்டம் ஜனவரி 6, 2025 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தின் போது, 278 முதன்மைப் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் பின்னர் மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் டெல்லி தலைமைச் செயலக அலுவலகங்களுக்குள் 17,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.

நாடு முழுவதும் உள்ள மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளின் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்குடன் மே 5, 2025 அன்று தொடங்கப்பட்ட திட்டத்தின் இரண்டாம் கட்டம், நாடு தழுவிய வலுவான பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த முயற்சி, சேவை மனப்பான்மை மற்றும் கர்மயோகி நெறிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிக பொறுப்புணர்வுள்ள, கருணைமிக்க, மக்களை மையப்படுத்தும் குடிமைப்பணிகளுக்குப் பங்களிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208111&reg=3&lang=1

----

TV/PKV/SE

 

(வெளியீட்டு அடையாள எண்: 2208233) வருகையாளர் எண்ணிக்கை : 49
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Assamese