பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நல் ஆளுகை குறித்த பயிலரங்கை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் டிசம்பர் 25 அன்று தொடங்கி வைக்கிறார்.
இடுகை இடப்பட்ட நாள்:
24 DEC 2025 3:05PM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 25 அன்று புதுதில்லி, சாணக்யபுரி, குடிமைப் பணி அதிகாரிகள் நிறுவனத்தில் நடைபெறும் நல் ஆளுகை குறித்த தேசியப் பயிலரங்கை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பணியாளர், பொதுகுறை தீர்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார். இது நல் ஆளுகை குறித்த ஐந்தாவது தேசியப் பயிலரங்காகும். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25 வரை கொண்டாடப்படும் நல் ஆளுகை வாரத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.
இது மேம்படுத்தப்பட்ட சேவை வழங்கல் மூலம் குடிமக்களையும் நிறுவனங்களையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது.
இந்தப் பயிலரங்கில், டாக்டர். ஜிதேந்திர சிங், பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவார். இதில் சிறப்புப் பிரச்சாரம் 5.0-இன் மதிப்பீட்டு அறிக்கை, சிபிஜிஆர்ஏஎம்எஸ்-இன் ஆண்டு அறிக்கை மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த தொகுப்பு ஆகியவை அடங்கும். மேலும், அவர் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட சில புதிய தகவல் தொழில்நுட்ப முயற்சிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208087®=3&lang=1
----
TV/PKV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2208224)
வருகையாளர் எண்ணிக்கை : 50