விண்வெளித்துறை
மிக அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியதன் மூலம் எல்விஎம்3 ராக்கெட் உலகத் தரம் வாய்ந்த நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
24 DEC 2025 3:10PM by PIB Chennai
அதிக எடை கொண்ட அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைகோள், எல்விஎம்3-எம்6 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவிற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமைத்துவத்தின் கீழ், இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருவதாகவும், விண்வெளித் தொழில்நுட்பத்தில், வளர்ந்து வரும் வலிமை, நம்பகத்தன்மை, உலகின் முன்னணி நாடாக இந்தியாவை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைகோள்களிலேயே மிகவும் அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை இந்திய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, குறிப்பிட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தத் திட்டம் இந்தியாவின் கனரக செயற்கைகோள் ஏவுதல் திறன்களில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், உலகளவில் வர்த்தக ரீதியில் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான சந்தையில் அதன் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எல்விஎம்3-எம்6 ராக்கெட் எவ்வித குறைபாடுமின்றி செயல்பட்டு, ப்ளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை நிர்ணயிக்கப்பட்ட அதன் புவி சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறைச் செயலாளரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அறிவித்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது என்றும், எல்விஎம்3-எம்6 ராக்கெட்டின் மூன்றாவது முழுமையான வர்த்தக ரீதியிலான திட்டம் இது என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டம், ராக்கெட்டின் சிறந்த நம்பகத்தன்மை, உலகத் தரம் வாய்ந்த செயல்திறனைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும், இது உலகளவில் விண்வெளித் துறையில் மிகச் சிறந்த நாடாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208090®=3&lang=1
---
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2208212)
आगंतुक पटल : 12