வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த சிந்தனை அரங்கம் – தில்லியில் வர்த்தக அமைச்சகம் நடத்தியது

प्रविष्टि तिथि: 24 DEC 2025 9:52AM by PIB Chennai

பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்படும் வாய்ப்புகள் குறித்த சிந்தனை அரங்கத்தை நேற்று (23.12.2025) மத்திய வர்த்தக அமைச்சகம் புதுதில்லியில் நடத்தியது. மத்திய வர்த்தகத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், இந்த அரங்கத்தைத் தொடங்கி வைத்தார். இந்திய பட்டயக் கணக்காளர் பயிற்சி நிறுவனம், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இந்த சிந்தனை அரங்கத்தை,  வர்த்தக அமைச்சகத்துடன் இணைந்து நடத்தின. நிகழ்ச்சியில் பேசிய வர்த்தகத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கி கொள்ள இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் பயனளிக்கும் என்றார். 

இவை சர்வதேச வர்த்தகத்தின் போட்டித்தன்மையையும், வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் என்று திரு ராஜேஷ் அகர்வால் கூறினார். உலக அளவில் சிறந்த வர்த்தக நிபுணர்களை உருவாக்குதல், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், வெளிநாடுகளில் தொழில்முறை கட்டமைப்புகளை  விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகிய நான்கு அமர்வுகளைக் கொண்டதாக இந்த சிந்தனை அரங்கம் நடைபெற்றது. உலகளாவிய சிறந்த நடைமுறைகள் குறித்த புரிதல்களை ஏற்படுத்துவதாக இந்த சிந்தனை அரங்கம் அமைந்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207978&reg=3&lang=1

***

TV/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2208044) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी