தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐபி & டிஏஎஃப்எஸ் நிறுவனம் 51-வது நிறுவன ஆண்டைக் கொண்டாடுகிறது

प्रविष्टि तिथि: 22 DEC 2025 2:43PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணி நிறுவனமான இந்திய தபால் மற்றும் தொலைத்தொடர்பு கணக்குகள் மற்றும் நிதிப் பணி  (ஐபி& டிஏஎஃப்எஸ்) அதன் 51-வது நிறுவன ஆண்டைக் கொண்டாடும் வகையில், 2025-ம் ஆண்டு தகவல் தொடர்பு நிதி உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது.

கூட்டத்தில் உரையாற்றிய தகவல் தொடர்பு கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் திருமிகு வந்தனா குப்தா, நிறுவனத்தின் 51 ஆண்டு பயணத்தையும், இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் துறைகளில் நிதி நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் அதன் முக்கிய பங்கையும் எடுத்துரைத்தார்.

பொருளாதார சீர்திருத்தங்கள், தாராளமயமாக்கல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை மற்றும் அஞ்சல் துறையில் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உருமாற்ற தாக்கத்தை அவர் விளக்கினார்.

வருவாய் உறுதி, உரிமக் கட்டணங்கள், ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணங்கள், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் நிதி மேற்பார்வை, உள் தணிக்கை, ஓய்வூதிய மேலாண்மை மற்றும் கொள்கை சார்ந்த நிதி ஆலோசனை ஆகியவற்றில் நிறுவனத்தின்  விரிவடையும் பொறுப்புகளை தலைமைக் கட்டுப்பாட்டாளர் வலியுறுத்தினர். 

உச்சிமாநாட்டின்போது, ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிகள் நிறுவனத்தின் பரிணாமம் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவது, தகவல் தொடர்புத் துறையில் நேர்மறையான அமைப்புரீதியான மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207358&reg=3&lang=1

***

SS/PKV/LDN/SE


(रिलीज़ आईडी: 2207496) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu