வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
வலையமைப்புத் திட்டமிடல் குழுவின் 105-வது கூட்டத்தில் பிரதமரின் விரைவுசக்தித் திட்டத்தின் கீழ் தளவாட போக்குவரத்து செயல்திறனை அதிகரிக்கும் திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டன
प्रविष्टि तिथि:
19 DEC 2025 4:54PM by PIB Chennai
உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுவதற்காக வலையமைப்புத் திட்டமிடல் குழுவின் (NPG) 105-வது கூட்டம் தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் (DPIIT) தளவாடங்கள் துறையின் இணைச் செயலாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்துடன் சீரான பல்வகை இணைப்பு மற்றும் தளவாட செயல்திறனை மேம்படுத்துவதில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியது. முக்கிய திட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:
ஈரோடு - கரூர் பிரிவு இடையே இரண்டாவது ரயில் பாதை:
தமிழ்நாட்டில் உள்ள 66.67 கி.மீ நீளமுள்ள ஈரோடு - கரூர் இடையே இரண்டாவது ரயில் பாதையை ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டம் குறுகிய சரக்கு வழித்தடங்களை ஆதரிக்கும், தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் பிராந்திய இயக்கத்தை வலுப்படுத்தும்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், விமான இணைப்பு மற்றும் தொழில்துறை மையங்களுடன் ஏற்கனவே உள்ள சாலை இணைப்புகளுடன் இந்த வழித்தடத்தின் வலுவான ஒருங்கிணைப்பு, தடையற்ற பன்முக போக்குவரத்தை செயல்படுத்தும். இந்த பாதையை இரட்டிப்பாக்குவது நிலக்கரி, எஃகு, சிமென்ட் மற்றும் கிரானைட் போன்ற முக்கிய பொருட்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே இரட்டிப்பு ரயில் பாதை:
சேலம்-கரூர்-திண்டுக்கல் ரயில் பாதையின் 159.26 கி.மீ. தூரத்துக்கு இரண்டாவது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் நெரிசலைக் குறைக்கவும், ரயில் பாதை திறனை அதிகரிக்கவும், சிறப்பாக, வேகமான பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளை செயல்படுத்தவும் முடியும்.
மேட்டூர் அனல் மின் நிலையம் மற்றும் எஃகு, சிமென்ட், ஜவுளி, விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளுக்கு சேவை செய்யும் ஒரு முக்கிய எரிசக்தி மற்றும் தொழில்துறை பாதையாக, மேம்படுத்தப்பட்ட ரயில் பாதை சரக்கு செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும், தளவாடத் திறனை மேம்படுத்தும் மற்றும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206595®=3&lang=1
***
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2206853)
आगंतुक पटल : 7