தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2025-ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறையின் முக்கிய செயல்பாடுகள்
प्रविष्टि तिथि:
19 DEC 2025 2:02PM by PIB Chennai
2025-ம் ஆண்டில் தொலைபேசி மற்றும் இணைய சேவையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி ஏற்பட்டது, அதே நேரத்தில் மிகக் குறைந்த தரவு செலவுகளும் ஏற்பட்டன. இது உலகளாவிய டிஜிட்டல் சக்தி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியது. தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டிலேயே மேம்படுத்தப்படும் வலையமைப்பு உள்கட்டமைப்பின் பெரிய அளவிலான விரிவாக்கமும் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்தது. உலகின் பிற பகுதிகளில் இத்தகைய தொழில்நுட்பத்தை உருவாக்க பல தசாப்தங்கள் எடுத்தாலும், இந்தியாவிற்கு வெறும் 2 ஆண்டுகளே ஆனது.
இந்தியாவில் மொத்த தொலைபேசி இணைப்புகள் மார்ச் 2014 -ல் 933 மில்லியனிலிருந்து 2025 செப்டம்பரில் 1228.94 மில்லியனாக அதிகரித்து 31.72% வளர்ச்சியைப் பதிவு செய்தன. 2025 செப்டம்பர் மாத இறுதியில் செல்பேசி இணைப்புகளின் எண்ணிக்கை 1182.32 மில்லியனாக இருந்தது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைபேசி அடர்த்தி மார்ச் 2014 -ல் 75.23% ஆக இருந்தது, இது செப்டம்பர் 2025 -ல் 86.65% ஆக உயர்ந்தது. 2014 மார்ச்சில் 25.15 கோடியாக இருந்த இணைய இணைப்புகள், ஜூன் 2025 -ல் 1 பில்லியனைத் தாண்டி 100.29 கோடியாக உயர்ந்து, 298.77% வளர்ச்சியைப் பதிவு செய்தன. 2014 மார்ச்சில் 6.1 கோடியாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகள், 2025 செப்டம்பரில் 99.56 கோடியாக உயர்ந்து, 1532.13% அதிகரித்துள்ளது.
2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குடிமக்களை மையமாகக் கொண்ட சஞ்சார் சாத்தி தளம் (www.sancharsaathi.gov.in), 21 மொழிகளில் கிடைக்கிறது. இன்றுவரை 22 கோடிக்கும் அதிகமான வருகைகளைப் பதிவு செய்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சஞ்சார் சாத்தி தளத்தில் நம்பகமான தொடர்பு விவரங்கள் என்ற புதிய தொகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் கட்டணமில்லா எண்கள், மின்னஞ்சல்கள் மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் உண்மையான வலைத்தளங்கள் போன்ற தொடர்பு விவரங்கள் உள்ளன.
சைபர் குற்றம் மற்றும் நிதி மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, தொலைத்தொடர்புத் துறை, மே 2025-ல் நிதி மோசடி ஆபத்து குறிகாட்டியை (FRI) அறிமுகப்படுத்தியது. இது, நிதி மோசடியில் ஈடுபடுவதற்கான சாத்தியமான ஆபத்தின் அடிப்படையில் செல்பேசி எண்களை வகைப்படுத்துகிறது.
தொலைத்தொடர்புத் துறை, இயற்கை பேரிடர்கள் மற்றும் வளர்ந்துவரும் பாதுகாப்பு சூழ்நிலைகளின் போது மீள்தன்மை கொண்ட தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற சேவைகளை உறுதி செய்யும் வகையில், அதன் பேரிடர் தயார்நிலை மற்றும் அவசரகால தகவல் தொடர்பு கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தியது. டிட்வா புயலின் போது, தமிழ்நாடு அரசு, புதுச்சேரி நிர்வாகம் மற்றும் தேசிய தொலைத்தொடர்பு மேலாண்மை ஆணையத்துடன் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒரு பிரத்யேக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அறை மூலம் தினமும் இரண்டு முறை வலையமைப்பு நிலை கண்காணிக்கப்பட்டது. இது தவிர, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் விளைவாக புயல் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வலையமைப்பு துண்டிப்புகள் பூஜ்ஜியமாக இருந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206477®=3&lang=1
***
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2206842)
आगंतुक पटल : 9