பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டில் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்காக ரூ. 94 கோடிக்கும் அதிகமான தொகை 15வது நிதிக் குழு மானியங்களாக விடுவிப்பு

प्रविष्टि तिथि: 19 DEC 2025 1:22PM by PIB Chennai

மத்திய அரசு, 2025-26 நிதியாண்டில் உத்தராகண்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்காக 94.236 கோடி ரூபாயை 15வது நிதிக் குழு மானியங்களாக விடுவித்துள்ளது. இதில், மாநிலத்தின் தகுதியுள்ள 13 மாவட்ட பஞ்சாயத்துகள், 95 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 7,784 கிராம பஞ்சாயத்துகளுக்கான 2024-25 நிதியாண்டின்  மானியங்களின் இரண்டாவது தவணையான ரூ. 94.10 கோடியும் அடங்கும். கூடுதலாக, 2024-25 நிதியாண்டின் நிபந்தனையற்ற மானியங்களின் முதல் தவணையில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியான ரூ 13.60 லட்சம், கூடுதலாகத் தகுதி பெற்ற 15 கிராம பஞ்சாயத்துகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம்  ஆகியவை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள்/பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கான 15வது நிதிக் குழு மானியங்களை விடுவிக்கப் பரிந்துரைக்கின்றன. அதைத் தொடர்ந்து, நிதி அமைச்சகம் ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளாக இந்த மானியங்களை விடுவிக்கிறது.  மானியங்கள், ஊதியம் மற்றும் பிற செலவுகளைத் தவிர்த்து, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 29 துறைகளின் கீழ், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள்/பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களால் இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.

********

 

Release ID: 2206458
VT/PKV/EA


(रिलीज़ आईडी: 2206662) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी