சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
நாட்டில் 58.26 லட்சம் டன் பேட்டரி கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன - மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்
प्रविष्टि तिथि:
18 DEC 2025 2:45PM by PIB Chennai
பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் 2022-ஐ 2022 ஆகஸ்ட் 24 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டது. இந்த விதிகளில் மின்சார வாகன பேட்டரிகள், வீட்டு உபயோக பேட்டரிகள், தொழில்துறை பேட்டரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான பேட்டரிகளும் அடங்கும். இந்த விதிகள் உற்பத்தியாளரின் விரிவாக்கம் செய்யப்பட்ட பொறுப்புடைமை என்ற கருத்தை அடிப்படையாக கொண்டதாகும். அதன்படி சந்தையில் உள்ள பேட்டரி கழிவுகளை சேகரித்தல் மற்றும் மறுசுழற்சிக்காக, பேட்டரி இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளின்படி 2027 – 28-ம் ஆண்டு முதல் புதிய பேட்டரிகள் உற்பத்தியில் உள்நாட்டில் மறுசுழற்சி செய்யப்பட்ட உபகரணங்களை குறைந்தபட்ச சதவிகித அளவிற்கு உற்பத்தியாளர்கள் பயன்படுத்த வேண்டுமென்பது கட்டாயமாகும்.
இந்த விதிகள் வெளியிட்ட பிறகு 58.26 லட்சம் டன் பேட்டரி கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.
இத்தகவலை மாநிலளங்களவையில் இன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205804®=3&lang=1
***
SS/IR/RK/SE
(रिलीज़ आईडी: 2206170)
आगंतुक पटल : 14