மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

பொறியியல் சேவைகள் தேர்வு 2025: இறுதி முடிவுகள் வெளியீடு

प्रविष्टि तिथि: 18 DEC 2025 10:56AM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2025-ம் ஆண்டிற்கான பொறியியல் சேவைகள் தேர்வின் இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வு மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தெரிவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைக்கப்பட்டவர்கள்: சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் இ & டி ஆகிய நான்கு துறைகளில் மொத்தம் 458 விண்ணப்பதாரர்கள் பணி நியமனத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

காலியிடங்கள்: அரசு அறிவித்த மொத்த காலியிடங்கள் 554 ஆகும். தகுதி மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் துறைகள் ஒதுக்கப்படும்.

தற்காலிகப் பட்டியல்: இதில் 102 விண்ணப்பதாரர்களின் தெரிவு தற்காலிகமானது .

காத்திருப்புப் பட்டியல்: எதிர்காலத் தேவைகளுக்காக மொத்தம் 186 பேர் கொண்ட ஒருங்கிணைந்த காத்திருப்புப் பட்டியல் பராமரிக்கப்படுகிறது.

தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல் 15 நாட்களுக்குள் யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு 011-23385271 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205700&reg=3&lang=1

***

VT/VK/AE


(रिलीज़ आईडी: 2205828) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी