உள்துறை அமைச்சகம்
சைபர் பாதுகாப்பு மற்றும் நிதி மோசடி தடுப்பு நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
17 DEC 2025 3:34PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சகம், நாட்டில் சைபர் குற்றங்களைத் தடுப்பது, கண்டறிவது, விசாரணை செய்வது மற்றும் வழக்குத் தொடர்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கட்டமைப்பையும், சூழலையும் உருவாக்கும் வகையில், 2018 - ம் ஆண்டில் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தை (I4C) ஒரு திட்டமாக நிறுவியது. குறுகிய காலத்திலேயே, சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாட்டின் ஒருங்கிணைந்த திறனை மேம்படுத்துவதற்கும், சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும் I4C வகை செய்கிறது. தற்போது, I4C ஜூலை 2024 முதல் உள்துறை அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு குடிமக்களுக்கான சைபர் குற்றம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் எதிர்கொள்வதில் கவனம் செலுத்துகிறது. பல்வேறு சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் பிற அமைப்பினருக்கு இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, விழிப்புணர்வு போன்றவை இதில் அடங்கும்.
சைபர் குற்றம் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், உள்துறை அமைச்சகத்தின் I4C மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு இடையே 2025 ஜனவரி 17 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது.
சமன்வயா தளம், ஒரு மேலாண்மைத் தகவல் அமைப்பு தளமாகவும், தரவுக் களஞ்சியமாகவும், சைபர் குற்றங்கள் தொடர்பானத் தரவுகளைப் பகிர்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் சட்ட அமலாக்க முகமைகளுக்கான ஒருங்கிணைப்புத் தளமாகவும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள சைபர் குற்றம் தொடர்பான புகார்களில் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளின் மாநிலங்களுக்கு இடையேயான பகுப்பாய்வின் அடிப்படையில் தேவையானத் தரவுகளை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205201®=3&lang=1
***
(Release ID: 2205201)
AD/SV/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2205652)
வருகையாளர் எண்ணிக்கை : 34