பிரதமர் அலுவலகம்
எத்தியோப்பிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
17 DEC 2025 1:37PM by PIB Chennai
எத்தியோப்பிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இது எத்தியோப்பியாவிற்கு தனது முதலாவது இருதரப்பு பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமருக்கு அளிக்கப்பட்ட ஒரு சிறப்பு மரியாதையாகும்.
எத்தியோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய மக்களின் நட்பையும் நல்லெண்ண வாழ்த்துகளையும் தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதும், இந்த ஜனநாயகக் கோயிலின் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர், பெருமைமிகு பெண்கள் மற்றும் இளைஞர்கள் என எத்தியோப்பியாவின் சாமானிய மக்களிடம் பேசுவதும் தமக்குக் கிடைத்த பேறு என்று அவர் குறிப்பிட்டார். எத்தியோப்பியாவின் கிரேட் ஹானர் நிஷான் என்ற மிக உயரிய விருதினைத் தமக்கு வழங்கியமைக்காக எத்தியோப்பிய மக்களுக்கும் அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தியா- எத்தியோப்பியா இடையேயான கலாச்சார உறவுகளை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளும் பண்டைய ஞானத்தையும் நவீன லட்சியத்தையும் இணைத்துள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலில், இந்தியாவின் "வந்தே மாதரம்" தேசியப் பாடலும் எத்தியோப்பியாவின் தேசிய கீதமும் தங்கள் நிலத்தைத் தாய் என்று குறிப்பிடுகின்றன என்று அவர் கூறினார். இரு நாடுகளின் பகிரப்பட்ட போராட்டத்தை எடுத்துரைத்து, 1941-ல் எத்தியோப்பியர்களுடன் சேர்ந்து விடுதலைக்காகப் போராடிய இந்திய வீரர்களின் பங்களிப்பை பிரதமர் நினைவுகூர்ந்தார் எத்தியோப்பிய மக்களின் தியாகங்களை அடையாளப்படுத்தும் அத்வா வெற்றி நினைவுச்சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தியது தமக்கு ஒரு கவுரவம் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியா-எத்தியோப்பியா இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்தவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் தெரிவித்தார். இந்த விஷயத்தில், எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் இந்திய ஆசிரியர்களும், இந்திய வணிகங்களும் செலுத்திய பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், எத்தியோப்பியாவின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப அதன் வளர்ச்சியைத் தொடர இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமான அடிஸ் அபாபா, ஆப்பிரிக்க ஒற்றுமைக் கனவுகளை நனவாக்குவதில் வகித்த முக்கிய பங்கினை எடுத்துரைத்த பிரதமர், அதன் தலைமையின் கீழ் ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20-ல் நிரந்தர உறுப்பினராக வரவேற்றதில் இந்தியா பெருமைப்படுவதாகக் கூறினார். தமது 11 ஆண்டுகால ஆட்சியில், இந்தியா-ஆப்பிரிக்கா உறவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 100-க்கும் அதிகமான முறை இரு தரப்பு அரசுத் தலைவர்களின் வருகை இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் பயணத்தை சக ஜனநாயகத்துடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்காக மாண்புமிகு அவைத்தலைவருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205106®=3&lang=1
***
AD/SMB/SE
(रिलीज़ आईडी: 2205577)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam