பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

"முழுமையான அரசு" அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்

प्रविष्टि तिथि: 15 DEC 2025 5:59PM by PIB Chennai

"முழுமையான அரசு" அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் பணியாளர் நிர்வாகத்தை நவீனமயமாக்கவும், நடைமுறை தாமதங்களை நிவர்த்தி செய்யவும், சேவைகள் முழுவதும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தவும் முடியும் என்றும் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்களின் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர்,  விதிகளை எளிமைப்படுத்துதல், தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் பொது சேவை வழங்கலை மேம்படுத்த விளைவு சார்ந்த நிர்வாகத்தை நோக்கி மாறுதல் ஆகியவற்றில்  நிர்வாக சீர்திருத்தங்கள் கடந்த பத்தாண்டுகளில் கவனம் செலுத்தியுள்ளன என்று கூறினார்.

பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை மேற்கொண்ட சீர்திருத்தங்களின் முக்கிய அம்சமாக, வழக்கத்தில் இல்லாத மற்றும் சிக்கலான விதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார். சான்றிதழ்களின் சான்றளிப்பு தேவை உட்பட கிட்டத்தட்ட 1,600–1,700 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், சில தேர்வுகளில் நேர்காணல்களை நீக்குவது போன்ற புறநிலை ஆட்சேர்ப்பு சீர்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், கர்மயோகி இயக்கத்தை திறன் மேம்பாட்டிற்கான மையத் தூணாக எடுத்துரைத்தார். இது பணியில் உள்ள அதிகாரிகளில் இருந்து புதிய பணியாளர்கள் வரை விரிவடைந்துள்ளது என்றும், இப்போது உள்ளாட்சி அமைப்புகள் அளவில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204228&reg=3&lang=1

(Release ID: 2204228)

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2204371) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी