குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
உதயம் இணையதளம் மூலம் 7.28 கோடிக்கும் அதிகமான எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
15 DEC 2025 3:06PM by PIB Chennai
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி உதயம் என்ற இணையதளம் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த இணையதளத்தின் வாயிலாக, நாடு முழுவதிலும் 7.28 கோடி குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்த இணையதளத்தில் பதிவுசெய்து கொள்வதன் மூலம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் அரசின் திட்டங்களுக்கான பயன்களைப் பெற தகுதியுடைய நிறுவனங்களாக உள்ளது.
இதற்கென 50-க்கும் அதிகமான பிரத்யேக இடைமுக செயலி வாயிலாக, பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளத்தின் மூலம் பல்வேறு தரவுகளை பெறுவதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தரவுகள் கொள்கைகளை வகுப்பதற்கும், திறன் வாய்ந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி கரந்தலாஜே இதனை தெரிவித்துள்ளார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204042®=3&lang=1***
SS/SV/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2204297)
வருகையாளர் எண்ணிக்கை : 38