பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளின் பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளின் மாதாந்திர (நவம்பர் 2025) செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியீடு
प्रविष्टि तिथि:
15 DEC 2025 11:43AM by PIB Chennai
மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளின் பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறைகளின் மாதாந்திர (நவம்பர் 2025) செயல்பாடுகள் குறித்த அறிக்கையை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பொது குறைகள் வகைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான தன்மை குறித்த விரிவான பகுப்பாய்வு தரவுகளுடன் வெளியிடப்பட்டுள்ளது
இதன்படி, மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகள் மூலம் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 60,450 பொது குறைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கடந்த மாதத்தில் மட்டும் 70,598 மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிக அளவாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 25,184 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தில்லியில் 7,989 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பிற்கான இணையதளம் வாயிலாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்டு தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை 1,65,930 ஆக உள்ளது. மேலும் 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203903®=3&lang=1***
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2204037)
आगंतुक पटल : 9