ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நயி சேதனா என்பது வெறும் திட்டம் அல்ல, அது ஒரு மக்கள் இயக்கம்: டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர்
प्रविष्टि तिथि:
13 DEC 2025 6:04PM by PIB Chennai
பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைக்கு கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துப் பங்குதாரர்களும் "ஒரு குரல், ஒரு தீர்மானம், சமத்துவத்திற்கான ஒரு புதிய ஆரம்பம்" என்ற உறுதியுடன் முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அளவிலான நயி சேதனா (புதிய உணர்வு) 4.0-ன் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், இந்த முயற்சியை பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த மக்கள் இயக்கம் என்று விவரித்தார். வன்முறையின் அனைத்து வடிவங்களையும் ஒழிக்க அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, குண்டூரில் பாலின வள மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2203538®=3&lang=1
***
SS/RB/RJ
(रिलीज़ आईडी: 2203659)
आगंतुक पटल : 5