தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக சிறப்புப் பார்வையாளர்கள் நியமனம்

प्रविष्टि तिथि: 12 DEC 2025 4:45PM by PIB Chennai

தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.

ஏற்கனவே தங்கள் பணியைத் தொடங்கியுள்ள சிறப்புப் பார்வையாளர்கள், பிப்ரவரி 2026-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் வரை இந்த மாநிலங்களில் வாரத்தில் இரண்டு நாட்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் கூட்டங்களை நடத்துவார்கள்.

ஒட்டுமொத்த செயல்முறையும் சீராகவும், வெளிப்படையாகவும், பங்கேற்புடனும் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, சிறப்புப் பார்வையாளர்கள், மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் நேரிலோ, காணொலிக் காட்சி வாயிலாகவோ ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள். எந்தவொரு தகுதியுள்ள வாக்காளரும் விடுபடாமல் இருக்கவும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கவும், சிறப்புப் பார்வையாளர்கள், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் செயல்முறையைக் கண்காணிப்பார்கள்.

(Release ID: 2203042)

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2203383) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Bengali , Bengali-TR