நிதி அமைச்சகம்
சிறு நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீடித்த வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வித்திடும்: தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் அறிக்கை
प्रविष्टि तिथि:
12 DEC 2025 12:43PM by PIB Chennai
இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முக்கிய உந்து சக்தியாக சிறு நிறுவனங்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுமத்தின் ஆய்வறிக்கையை அதன் துணைத்தலைவர் திரு மனீஷ் அகர்வால், இம்மாதம் 11-ம் தேதி வெளியிட்டார். தொழிலாளர்களின் திறமையையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்வதன் மூலம் தொழில் நிறுவனங்களில் உள்ள தடைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பேராசிரியர் பர்சானா அஃப்ரிடி தலைமையிலான ஆய்வாளர் குழு இது தொடர்பாக ஆய்வு செய்து தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மந்தமான சூழல் உள்ள போதிலும் சுய வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க முடியும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் நீடித்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை 8 சதவீதம் அளவில் பராமரிக்க உதவுவதுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டவும் உதவிடும் என்று அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202808®=3&lang=1
***
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2203155)
आगंतुक पटल : 5