சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
புது தில்லியில் நடைபெற்ற தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தின் 3-வது பொதுக்குழு கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தலைமை தாங்கினார்
प्रविष्टि तिथि:
12 DEC 2025 1:18PM by PIB Chennai
புது தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையத்தின் 3-வது பொதுக்குழு கூட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை தாங்கினார். அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அமர்வில் நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்றனர். கடலோர மற்றும் கடல்சார் ஆராய்ச்சி மற்றும் மேலாண்மைத் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களும் இதில் கலந்து கொண்டனர். குறிப்பாக கடலோர சுற்றுச்சூழல் மதிப்பீடு, பருவநிலை மீள்தன்மை மற்றும் கடல் வாழ்விட மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் மேலாண்மை மையத்தின் அறிவியல் பங்களிப்புகளை திரு யாதவ் ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பில் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202846®=3&lang=1
***
SS/PKV /KR
(रिलीज़ आईडी: 2203126)
आगंतुक पटल : 15