சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலாத் தலங்களில் மகளிருக்கான பாதுகாப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
11 DEC 2025 2:40PM by PIB Chennai
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மாநில அரசுகளின் பொறுப்பில் வரும்.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த, சுற்றுலா காவல்துறை என்ற தனிப் பிரிவை அமைப்பதற்காக சுற்றுலா அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. சுற்றுலா அமைச்சகத்தின் முயற்சிகளால், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தில்லி, கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் சுற்றுலா காவல் பிரிவை நிறுவியுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் ஒரு பகுதியாக, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக, சர்வதேச மொழிகளான ஜெர்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், ரஷ்யன், சீனம், ஜப்பானியம், கொரியன், அரபு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் 1800111363 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை சுற்றுலா அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
நிர்பயா நிதியின் கீழ் 'பெண்களுக்கான பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள்' திட்டத்தின் பலன்களைப் பெறுமாறு சுற்றுலா அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் யூனியன் பிரதேசங்களையும் அவ்வப்போது கேட்டு வருகிறது. பெண் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு மாநில அரசுகள் இதைப் பயன்படுத்தலாம்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது குறித்து உள்துறை அமைச்சகம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுலா - கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202216®=3&lang=1
(Release ID: 2202216)
***
AD/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2202619)
வருகையாளர் எண்ணிக்கை : 58