குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க ஏற்பாடு – மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே
प्रविष्टि तिथि:
11 DEC 2025 2:35PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், சர்வதேச கண்காட்சிகள், வாங்குபவர், விற்பவர் சந்திப்புகள் ஆகியவற்றில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்கவும் இந்தியாவில் சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யவும் நிதியுதவி வழங்குவதற்காக சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமத்தில் பதிவு செய்து உறுப்பினராகியுள்ள குறு, சிறு தொழில்துறையைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதிகளுக்காக காப்பீட்டு பிரீமியம், சோதனை மற்றும் தரச்சான்றிதழுக்காகவும் முதல் முறையாக நிதி ஆதரவு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2020-21-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரை 1,361 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பயனடைந்துள்ளனர். மேலும், ஒட்டுமொத்த ஏற்றுமதி சூழலை வலுப்படுத்த 2025 நவம்பர் 12 அன்று ஏற்றுமதி மேம்பாட்டு இயக்கத்திற்கு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த இயக்கம் மூலம் 2025-26 நிதியாண்டு முதல் 2030-31-ம் நிதியாண்டு வரை ரூ.25,060 கோடி ஒதுக்கீட்டுடன் ஏற்றுமதி மேம்பாட்டிற்காக உதவும்.
இத்தகவலை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202208®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2202556)
आगंतुक पटल : 14