குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குக் குடியரசு துணைத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 1:54PM by PIB Chennai
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் இன்று (11.12.2025) குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அச்சமற்ற தேசியவாதியாகவும், தொலைநோக்குப் பார்வை கொண்ட சமூக சீர்திருத்தவாதியாகவும், புரட்சிகரக் கவிஞராகவும் திகழ்ந்த பாரதியார், தேசபக்தி, சமத்துவம், மனித கண்ணியம் குறித்த தமது எழுச்சியூட்டும் கருத்துகள் மூலம் நாட்டின் மனசாட்சியை தட்டியெழுப்பினார் என்று கூறியுள்ளார்.
பாரதியாரின் சக்திவாய்ந்த சொற்களும் முற்போக்கான கொள்கைகளும் தொடர்ந்து தேசபக்தியைத் தூண்டி, தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருவதாக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 2202184)
AD/PLM /SH
(रिलीज़ आईडी: 2202530)
आगंतुक पटल : 11