பிரதமர் அலுவலகம்
இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி, பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
10 DEC 2025 10:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, 2025-2029-ம் ஆண்டுகளுக்கான இத்தாலி-இந்தியா கூட்டு உத்திசார் செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் எடுத்து வரும் முன்னேற்பாட்டுப் பணிகளுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். வர்த்தகம், முதலீடு, ஆராய்ச்சி, புதுமை, பாதுகாப்பு, விண்வெளி, போக்குவரத்து இணைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமைத் துறைகள் தொடர்பாக விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானியை சந்தித்ததில் மகிழ்ச்சி. வர்த்தகம், முதலீடு, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, பாதுகாப்பு, விண்வெளி, போக்குவரத்து இணைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, கல்வி, மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் இத்தாலி-இந்தியா கூட்டு உத்திசார் செயல் திட்டம் 2025-2029-ஐ செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் எடுத்து வரும் முன்னேற்பாட்டுப் பணிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா-இத்தாலி நட்புறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இது நமது மக்களுக்கும் உலக சமூகத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது.
@GiorgiaMeloni
@Antonio_Tajani”
***
(Release ID: 2201976)
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2202148)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam