ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே மேம்பாலம், சுரங்கபாதை அமைப்பதில் மூன்று மடங்கு சாதனை

प्रविष्टि तिथि: 10 DEC 2025 4:44PM by PIB Chennai

கடந்த 11 ஆண்டுகளில் (2014-2025 அக்) 13,653 சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்களை ரயில்வே அமைத்துள்ளது.

 இது 2004-2014 வரையிலான காலத்தில் அமைக்கப்பட்ட 4,148 பாலங்களை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 4,148 பாலங்கள்தான் கட்டப்பட்டன. ஆனால்  2014-ம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 13,653 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

 தற்போது, நாடு முழுவதும் ₹1,11,583 கோடி செலவில் 4,689 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் திட்டமிடப்பட்டு, பல்வேறு நிலைகளில் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ரூ.11,686 கோடியில் 316 பாலங்களும், மகாராஷ்டிராவில் ரூ.5,506 கோடியில் 275 பாலங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

 பணிகளை விரைவுபடுத்த, ரயில்வே மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடன் கூட்டு ஆய்வுகள், காலமுறை கூட்டங்கள் மற்றும் வடிவமைப்பு ஒப்புதலுக்கான தரப்படுத்தப்பட்ட வரைபடங்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்தத் தகவலை மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201554&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு அடையாள எண்: 2201546

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2201962) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada