சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மகளிர் மற்றும் சிறுமியரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த தில்லி மெட்ரோ பிரச்சாரத்தை மத்திய சுகாதார அமைச்சகமும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நடத்தின
प्रविष्टि तिथि:
10 DEC 2025 11:40AM by PIB Chennai
மகளிர் மற்றும் சிறுமியரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பிரச்சாரத்தை இன்று சுல்தான்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கியது. 2025, டிசம்பர் 10 முதல் 2026, ஜனவரி 10 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரம், மெட்ரோ ரயில்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, டிஜிட்டல் பாகுபாட்டைக் குறைத்தல்; பெண்களுக்கு மனநல ஆதரவை மேம்படுத்துதல்; மற்றும் காசநோய் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை லட்சக்கணக்கான பயணிகளுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது;
இந்த நிகழ்வில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, "பெண்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் ஒரு குடும்பமோ அல்லது ஒரு தேசமோ உண்மையில் முன்னேற முடியாது. பெண்களின் ஆரோக்கியமும் பாதுகாப்பும் மிக முக்கியமான பிரச்சனைகள். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பிரச்சாரத்தின் மூலம், இந்த செய்தியை பொதுமக்களிடம் பரவலாகக் கொண்டுசெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இது மக்களுக்கு நேரடியாக செய்தியை எடுத்துச் செல்லும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்" என்றார்.
இந்த சக்திவாய்ந்த செய்திகளை நகரம் முழுவதும் கொண்டு செல்ல தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் கதவுகளையும் நடைமேடைகளையும் திறந்ததற்கு நன்றி தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பொறுப்பு அதிகாரி டாக்டர் கேத்ரினா போஹ்மே, இந்த பிரச்சாரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201295®=3&lang=1
****
AD/SMB/SH
(रिलीज़ आईडी: 2201894)
आगंतुक पटल : 32