தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கம் 1,469 திரைப்படங்களை டிஜிட்டல்மயமாக்கியது

प्रविष्टि तिथि: 10 DEC 2025 4:18PM by PIB Chennai

பழைய திரைப்படங்களைப் பாதுகாத்து டிஜிட்டல் மயமாக்க தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுவரை 1,469 திரைப்படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. அவை 4.3 லட்சம் நிமிட திரைப்படங்களுக்கு சமம். இவற்றில் திரைப்படங்கள்குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் அடங்கும். டிஜிட்டல்மயமாக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்ட திரைப்படங்கள் இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தால் பராமரிக்கப்படுகின்றன. இத்திரைப்படங்கள் அதன் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

பெங்காலி உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்படத் தயாரிப்பாளர்களை மத்திய அரசு ஆதரிக்கிறது.

திரைப்பட உள்ளடக்க மேம்பாடுதொடர்பு மற்றும் பரவல் என்ற திட்டத்தின் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து விளம்பரப்படுத்துவதற்கு தகவல்ஒலிபரப்பு அமைச்சகம் நிதி மற்றும் பிற ஆதரவை வழங்குகிறது.

இது மாநில மொழி திரைப்படங்கள் தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களைச் சென்றடைய உதவுகிறது.

தகவல்ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இன்று (10 டிசம்பர் 2025) மக்களவையில் திரு நாராயண் டட்டு ரானேதிரு சௌமித்ரா கான் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2201518)

AD/SMB/SH


(रिलीज़ आईडी: 2201789) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada