தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரசார் பாரதி மூலம் அரசு நலத்திட்டங்கள், பேரிடர் எச்சரிக்கைகள் குறித்த தகவல்கள் விரிவாக அளிக்கப்படுகிறது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

प्रविष्टि तिथि: 10 DEC 2025 4:03PM by PIB Chennai

நாட்டில், குறிப்பாக ஊரக, கடைக்கோடி மற்றும் எல்லைப்பகுதிகளில் அரசு நலத்திட்டங்கள், பொது அறிவிப்பு, பேரிடர் தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமது பொதுசேவை ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி (தூர்தர்ஷன், ஆகாஷ்வாணி) மூலம் எஃப்எம், எம்டபிள்யூ, எஸ்டபிள்யூ, வானொலி, அலைவரிசைகள், தொலைக்காட்சி, டிடி இலவச சேவை, மின்னணு தளங்கள், மொபைல் செயலிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு உரிய தகவல்கள் சென்று சேர்வதை அரசு உறுதி செய்கிறது.

பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகள் குறுஞ்செய்தி, மொபைல் செயலிகள் உள்ளிட்டவை மூலம் பிராந்திய மொழிகளில் அளிக்கப்படுகிறது. டிடி இலவச சேவை மூலம் அனைத்து தூர்தர்ஷன் அலைவரிசைகளும், 48 ஆகாஷ்வாணி அலைவரிசைகளும், குறிப்பிட்ட தனியார் அலைவரிசைகளும், 260-க்கும் மேற்பட்ட கல்வி அலைவரிசைகளும் ஒலிபரப்பாகின்றன.  அரசு திட்டங்கள் குறித்த நிகழ்ச்சிகள், ஆவணங்கள் மற்றும் தகவல் குறித்தும், பேரிடர் அறிவுரைகள் குறித்தும் தூர்தர்ஷன் மற்றும் டிடி நியூஸ் ஒலிபரப்புகிறது.

260-க்கும் அதிகமான ஆகாஷ்வாணி நிலையங்களின் நிகழ்ச்சிகள் நியூஸ் ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பாகிறது.

இத்தகவலை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் இன்று உறுப்பினர் திரு ராஜேஷ் ரஞ்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201497&reg=3&lang=1  

***

SS/IR/RJ/SH       


(रिलीज़ आईडी: 2201787) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu , Kannada