உள்துறை அமைச்சகம்
தீபாவளி யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா மகிழ்ச்சி
நவீன யுகத்திலும் கூட நமது பழங்கால கலாச்சார நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது - திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
10 DEC 2025 3:24PM by PIB Chennai
யுனெஸ்கோவின் உருவமற்ற, உணர முடியாத பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை இடம்பெற்றுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"யுனெஸ்கோவின் உருவமற்ற பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகை இடம்பெற்றிருப்பது இந்தியாவிற்கு பெருமையான தருணம். நவீன யுகத்திலும் கூட நமது பழங்காலக் கலாச்சார நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை இது குறிக்கிறது. தீபங்களின் திருவிழா பழங்காலத்திலிருந்தே நல்லவர்கள், நீதிநெறி கொண்டவர்களின் வெற்றியைக் குறிப்பதுடன் அதன் மீது நமக்கு நம்பிக்கையைத் தூண்டியுள்ளது. இப்போது அது உலகளாவிய நல்வாழ்வை ஊக்குவிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது."
***
(Release ID: 2201454)
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2201777)
आगंतुक पटल : 7