புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின்-விவசாயிகளுக்கான சூரியசக்தி திட்டத்திற்கு 2025 நவம்பர் வரை ரூ.7,106 கோடி விடுவிப்பு
प्रविष्टि तिथि:
10 DEC 2025 11:56AM by PIB Chennai
பிரதமரின்- விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்டம் விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள் உள்ளிட்ட விவசாயிகள் குழுவினர், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோருக்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 30.11.2025 வரை மொத்தம் 10,203 மெகாவாட் அளவிற்கு சூரிய மின்சக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்தும் மாநில முகமைகள் அளித்த தகவல்களின் படி 30.11.2025 வரை இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு ரூ.7,106 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை எளிமையாக அமல்படுத்தும் வகையில், அமைச்சகம் விதிமுறைகளை எளிமைப்படுத்தி 17.1.2024 அன்று திருத்தப்பட்ட விரிவான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு தொகுப்பு எ மூலம் 3.00 மெகாவாட் திறன் அளவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 3.00 மெகாவாட் திறன் நிறுவப்பட்டது.
தொகுப்பு பி மூலம் 5,187 மெகாவாட் திறன் அளவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 4,948 மெகாவாட் திறன் நிறுவப்பட்டது.
இத்தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஸ்ரீபத் யஸோ நாயக் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201309®=3&lang=1
***
SS/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2201728)
आगंतुक पटल : 36