உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 5:40PM by PIB Chennai

கடந்த இரண்டு ஆண்டுகளில், உளவுத்துறை மேம்பாடு, பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, இணையவழி கண்காணிப்பு மற்றும் மறைகுறியாக்கப்பட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது மற்றும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அரசு பல்வேறு முக்கிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவை பயங்கரவாத அபாயங்களைக் குறைப்பதற்கான மத்திய மற்றும் மாநில சட்ட அமலாக்க நிறுவனங்களின் திறனை கணிசமாக வலுப்படுத்தியுள்ளன.

மத்திய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறைக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, பணியமர்த்தல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வெற்றிகரமான கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200966&reg=3&lang=1

(Release ID: 2200966)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2201197) आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese