உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மக்கள் தொகை கணக்கெடுப்பில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 5:36PM by PIB Chennai

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை டிஜிட்டல் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்பேசி செயலிகள் மூலம் தரவுகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பதிலளிப்பவர்கள் வலை-தளம் மூலம் சுயமாக கணக்கெடுப்பில் விவரங்களை சமர்ப்பிக்கலாம். மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை ஒரு பிரத்யேக வலைத்தளம் மூலம் நிர்வகிக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனிநபரின் தகவல்களும் அவர்கள் இருக்கும்  இடத்திலேயே சேகரிக்கப்படுகின்றன. கணக்கெடுப்புக்கான கேள்வித்தாள், மத்திய அரசால் அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் களப்பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு அறிவிக்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் இதைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200951&reg=3&lang=1

(Release ID: 2200951)

***

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2201184) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese