ரெயில்வே அமைச்சகம்
திருப்பதி – சாய்நகர் சீரடி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவை: மத்திய இணையமைச்சர் திரு வி சோமண்ணா தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 1:57PM by PIB Chennai
திருப்பதி – சாய்நகர் சீரடி இடையே எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை புதுதில்லி ரயில் பவனில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக மத்திய ரயில்வே மற்றும் நீர்வளத்துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் சேவை மூலம் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களில் ரயில் போக்குவரத்து மேம்படும். பக்தர்களுக்காக ஆந்திரப்பிரதேசத்தின் தெற்கு கடற்பகுதியிலிருந்து சீரடிக்கு முதன்முறையாக நேரடி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக தலமான திருப்பதி மற்றும் சீரடியை நேரடியாக இணைக்கும் சேவை மூலம் யாத்ரீகர்களுக்கான வசதி மேம்படும். இந்த புதிய ரயில் ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைக்கு ஊக்கமளித்து பிராந்திய வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும். அத்துடன் பயணிகள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாநிலத்திற்குள் தடையின்றி பயணிக்கவும் முடியும். இதனால் யாத்ரீகர்களின் ரயில் பயண அனுபவம் மேம்படும். இந்த புதிய வாராந்திர ரயில் சுமார் 30 மணி நேரத்தில் யாத்ரீகர்களுக்கு தடையற்ற பயணத்தை அளிக்கும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு வி சோமண்ணா, திருப்பதி-சாய்நகர் சீரடி இடையேயான ரயில் சேவை தொடக்கம் நான்கு மாநில பக்தர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200786®=3&lang=1
***
SS/IR/RJ/RK
(रिलीज़ आईडी: 2200970)
आगंतुक पटल : 16