ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரிபுராவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு சாலை இணைப்புகள்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 10:41AM by PIB Chennai

மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், திரிபுராவில் பழங்குடி மக்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான  பிரதமரின் மாபெரும்  திட்டத்தின் கீழ்,ரூ.68.67 கோடி முதலீட்டில் 65.38 கிமீ நீளமுள்ள 25 சாலைத் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை, மாநிலத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய 30 பழங்குடியின பகுதி குடியிருப்புகளுக்கு  அனைத்து காலநிலையிலும் பயன்படுத்தக்கூடிய சாலை இணைப்பை வழங்கும்.

இது பழங்குடி குழுக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல், கிராமப்புறங்களில் இணைப்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் வணிகத்தை வளர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், சுகாதாரம், கல்வி மற்றும் சந்தைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதுடன், வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துகிறது. வடகிழக்கு பகுதிகளின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அரசின் உறுதிப்பாட்டை இந்தத் திட்டங்கள் வலுப்படுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200687&reg=3&lang=1  

***

SS/VK/RK


(रिलीज़ आईडी: 2200753) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese