தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கேரள மாநிலம் கோட்டயம் சிஎம்எஸ் கல்லூரியில் நவீன முறையில் அஞ்சல் அலுவலக விரிவாக்கப் பிரிவு திறக்கப்பட்டது
प्रविष्टि तिथि:
09 DEC 2025 11:12AM by PIB Chennai
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியில் புதிய தலைமுறையினருக்கான நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலக விரிவாக்கப் பிரிவை இந்தியா போஸ்ட் திறந்துள்ளது. கேரள மத்திய பிராந்திய அஞ்சல் சேவை இயக்குநர் திரு என் ஆர் கிரி இதை திறந்து வைத்தார். இந்திய அஞ்சல் அலுவலர்களுடன் இணைந்து சிஎம்எஸ் கல்லூரியின் மாணவர்கள் திட்டமிட்டு இந்த அஞ்சல் அலுவலக பிரிவை உருவாக்கியுள்ளனர்.
சுற்றுலா தலத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல மேஜை வடிவமைக்கப்பட்டுள்ளது. பணியாற்றுவதற்கு ஏதுவாக லேப்டாப் மற்றும் மொபைல் உபகரணங்களுக்கான மின்னேற்றி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புத்தக அலமாரிகளும், உள்ளரங்கு விளையாட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200717®=3&lang=1
***
SS/IR/RJ/RK
(रिलीज़ आईडी: 2200743)
आगंतुक पटल : 19