பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் நிலத்திற்கு அடியில் அமைத்துள்ள குழாய்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:49PM by PIB Chennai
எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிலத்திற்கு அடியில் அமைத்துள்ள குழாய்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. முறையான அனுமதியின்றி நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள் காரணமாக நிலத்திற்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தரவு பெறும் அமைப்புமுறை, நிகழ்நேர கண்காணிப்பு நடவடிக்கைகள், தொடர் ரோந்து மூலம் பாதுகாப்பதற்கான பணிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவை கண்டறிவதற்கான அமைப்பு, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குழாய்களுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புகளை கண்டறியும் நடைமுறை பதிக்கப்பட்டுள்ள குழாய் குறித்த வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெட்ரோலியம் மற்றும் கனிமங்களுக்கான குழாய்கள் சட்டத்தின் கீழ், எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நிரந்தரமான கட்டடங்களை கட்டுதல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தை மீறுவோர் மீது பயனாளர் உரிமைச் சட்டத்தின் கீழ் அபராதம் அல்லது சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200388®=3&lang=1
****
AD/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2200581)
आगंतुक पटल : 9