PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உணவு எண்ணெய் சூழலியலை வலுப்படுத்தும் தேசிய உணவு எண்ணெய்கள் இயக்கம்

प्रविष्टि तिथि: 08 DEC 2025 1:22PM by PIB Chennai

இந்தியாவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உணவு  எண்ணெய்கள் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும், எண்ணெய் வித்துக்கள் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உணவு கொழுப்புகள், சக்தி மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் முக்கிய ஆதாரமாக உள்ளன, அவை பசியை எதிர்த்துப் போராடவும் கலோரி உட்கொள்ளலை மேம்படுத்தவும் உதவுகின்றன, குறிப்பாக பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்களிடையே. எண்ணெய் வித்துக்கள் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல் விவசாயிகளின் நலனுக்கும் பங்களிக்கின்றன. மேலும், கிராமப்புற வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை நிலைநிறுத்தும் ஒரு முக்கியமான பணப் பயிராக செயல்படுகின்றன.

இந்த இரட்டை முக்கியத்துவம் இருந்தபோதிலும், நாட்டின் சமையல் எண்ணெய்களுக்கான தேவை உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக உள்ளது. இந்தியாவின் தனிநபர் சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது, 2004-05 -ம் ஆண்டில் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 5.76 கிலோ மற்றும் நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 7.92 கிலோவிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் முறையே ஆண்டுக்கு 10.58 கிலோ மற்றும் 11.78 கிலோவாக அதிகரித்துள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் உற்பத்தி 12.18 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி மூலம் சமையல் எண்ணெய்களுக்கான உள்நாட்டு தேவையில் 44 சதவீதத்தை மட்டுமே நாடு பூர்த்தி செய்ய முடிகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தாலும், அதன் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை நிரப்ப இந்தியா இறக்குமதியை கணிசமாக நம்பியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்வதை நம்பியிருப்பது 2015-16 ஆம் ஆண்டில் 63.2% இலிருந்து 2023-24 ஆம் ஆண்டில் 56.25% ஆகக் குறைந்துள்ளது, இது தன்னிறைவில் 36.8%-இலிருந்து 43.74% ஆக ஒரு மிதமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்த நுகர்வு உயர்வால் இந்த முன்னேற்றம் குறைக்கப்படுகிறது,

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200287&reg=3&lang=1

***

SS/PVK/RK


(रिलीज़ आईडी: 2200476) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati