தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
08 DEC 2025 12:37PM by PIB Chennai
தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) 22-ம் தேதிக்குள்ளும் எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு இதற்கான கால அவகாசம் முறையே இம்மாதம் (டிசம்பர் 2025) 15-ம் தேதி மற்றும் 29-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை மின்னணு முறையில் ட்ராய் அமைப்பின் (வலைதளம், அலைக்கற்றை, உரிமம்) ஆலோசகர் திரு சமிர் குப்தாவிற்கு adv-nsll@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அதன் நகலை ja2-nsl2@trai.gov.in என்ற முகவரியிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஏதேனும் விளக்கங்கள் மற்றும் தகவல்களை பெற ட்ராய் ஆலோசகர் திரு சமிர் குப்தாவின் தொலைபேசி எண்ணை (+91-11-20907752) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2200266)
SS/SV/RJ/RK
(रिलीज़ आईडी: 2200332)
आगंतुक पटल : 13