ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நீர் பாதுகாப்பு என்பது தேசிய பாதுகாப்பு: மத்திய இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 11:46AM by PIB Chennai
இந்தியாவின் நீர்நிலை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் நிலையான கிராமப்புற வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கிராமப்புற மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் இன்று (08.12.2025) கோஹிமாவில் உள்ள நாகா ஒற்றுமை பூங்காவில் மாநில அளவிலான நீர்நிலை திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.
நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளை நீர் பாதுகாப்பான, நிலப்பரப்புகளாக மாற்றுவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டில் இந்நிகழ்ச்சி ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.
சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர், நீர் பாதுகாப்பு என்பது தேசியப் பாதுகாப்பு என்றும், பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுப்பது, சீர் கெட்ட நிலங்களை மீட்டெடுப்பது, நீர் சேகரிப்பு முறைகளை வலுப்படுத்துவது ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, கூட்டுறவு கூட்டாட்சி உணர்வில் மத்திய அரசும் மாநிலமும் இணைந்து, பிரதமரின் நீர் பாதுகாப்பான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து செயல்படும் ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200246®=3&lang=1
***
SS/PKV/RK
(रिलीज़ आईडी: 2200272)
आगंतुक पटल : 19