உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தில் அகமதாபாத் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 07 DEC 2025 7:43PM by PIB Chennai

குஜராத்தில் அகமதாபாத் மாநகராட்சியின் ரூ.1500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர்  திரு அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பீகாரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தங்கள் கூட்டணிக்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், நாடு முழுவதும் வளர்ச்சி ஏற்பட்டுஒவ்வொரு துறையும் முன்னேறி வருகிறது, என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவை ஒரு சிறந்த உலகளாவிய சக்தியாக மாற்றும் உறுதியை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் சனாதன தர்மம் இன்று உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாட்டு வசதிகள், உள்கட்டமைப்பு, விளையாட்டுகளில் இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர்  தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா இன்று குஜராத்தில் கட்டப்பட்டு வருவதாகவும், ஆசியாவின் மிகப்பெரிய பசுமை நகரம்  தோலேராவில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் திரு அமித் ஷா கூறினார். இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையான சூரத்சென்னை விரைவுச் சாலைகுஜராத்தில் இருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200109&reg=3&lang=1

***

SS/RB/RK


(रिलीज़ आईडी: 2200243) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Odia , Kannada