சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
போராட்டங்களையே வலிமையாக மாற்றி உருவாகி வரும் ராய்ப்பூர்-விசாக் பொருளாதார வழித்தடம்
प्रविष्टि तिथि:
07 DEC 2025 9:45AM by PIB Chennai
ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடம், மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடம், சத்தீஸ்கர் காடுகள், ஒடிசாவின் கனிம வளம் மிக்க நிலப்பரப்புகள், ஆந்திராவின் மலைகள் வழியாக வரும் சிக்கலான வழித்தடமாகும். இந்த வழித்தடம் மொத்தம் 16,482 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது டிசம்பர் 2026- க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது 132 கிலோ மீட்டர் பயண தூரத்தையும் கிட்டத்தட்ட ஏழு மணிநேர பயண நேரத்தையும் மிச்சப்படுத்தும். இது பெரிய எரிபொருள் சேமிப்பை உருவாக்கும். பொதுமக்களுக்கும், சரக்கு போக்குவரத்துக்கும் இந்த வழித்தடம் செலவுகளைக் குறைக்கும்.
பொருளாதார நன்மைகளைத் தாண்டி, ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான தம்தாரி, கேஷ்கல், கான்கர் (சத்தீஸ்கர்), போரிகும்மா, நபரங்பூர், கோராபுட் (ஒடிசா), ராமபத்ரபுரம், அரக்கு (ஆந்திரப் பிரதேசம்) போன்றவற்றின் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தும். இந்த பகுதிகளை முக்கிய சந்தைகளுடனும் அத்தியாவசிய சேவைகளுடனும் இது இணைக்கும். ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் பொருளாதார வழித்தடம், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக நிற்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199944®=3&lang=1
***
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2200067)
आगंतुक पटल : 13