புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தொடர்ந்து அதிக ஆதரவு வழங்கப்படும் - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

प्रविष्टि तिथि: 07 DEC 2025 11:00AM by PIB Chennai

பசுமை எரிசக்தி தொடர்பான பாரிஸ் பருவ நிலை ஒப்பந்த இலக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே, இந்தியா எட்டியுள்ளது. தனது நிறுவப்பட்ட மின்சாரத் திறனில் 50 சதவீதத்தை புதைபடிவ எரிபொருள் அல்லாத பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யும் இலக்கை இந்தியா ஏற்கனவே அடைந்துள்ளது. 2025 அக்டோபர் 31 நிலவரப்படி, புதைபடிவமற்ற பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்திறன் சுமார் 259 ஜிகாவாட் ஆக உள்ளது.

சில இடங்களில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு புதிய கடனுதவியை நிறுத்துமாறு புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் கடன் வழங்குநர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டங்களுக்கோ அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உபகரண உற்பத்தி வசதிகளுக்கோ கடன் வழங்குவதை நிறுத்துவது குறித்து, நிதி நிறுவனங்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

மத்திய அரசு, இந்தியாவை சூரிய மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறச் செய்யவும், உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக நிலைநிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது. உயர் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி தொகுதிகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் உள்ளிட்ட விரிவான முயற்சிகள் மூலம் இந்த துறைக்கு அரசு அதிக ஆதரவு அளிக்கிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக சூரிய சக்தி மின் உற்பத்தி  122 ஜிகா வாட் ஆக அதிகரித்துள்ளது. 2014-ல் இது வெறும் 2.3 ஜிகாவாட் ஆக இருந்த.

இந்தியாவின் சூரிய சக்தி பயணம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும், எதிர்காலத்திற்குத் ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199964&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2200063) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi