கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் வாவ்-தரத் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உயிரி-சிஎன்ஜி ஆலையை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

இரண்டாவது வெண்மைப் புரட்சி நிச்சயமாக வெற்றி பெறும் - திரு அமித் ஷா

சுழற்சிப் பொருளாதாரத்தின் மூலம், பால் உற்பத்தியாளர்களின் வருமானம் 20 சதவீதம் அதிகரிக்கும் - திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 06 DEC 2025 5:56PM by PIB Chennai

குஜராத்தின் வாவ்-தரத் மாவட்டத்தில் பனாஸ் டெய்ரி நிறுவனத்தால் புதிதாக கட்டப்பட்ட உயிரி-அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி), உர ஆலையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (06.12.2025) திறந்து வைத்தார். மேலும், 150 டன் திறன் கொண்ட பவுடர் ஆலைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், குஜராத் சட்டப்பேரவைத் தலைவர் திரு சங்கர் சௌத்ரி, மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர்கள் திரு கிருஷ்ணன் பால் குர்ஜார், திரு முரளிதர் மொஹோல், மத்திய கூட்டுறவு செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, பனாஸ்கந்தாவில் பனாஸ் பால் பண்ணையை நிறுவிய கல்பாபாய் நஞ்சிபாய் படேல் தொடங்கிய பயணம் படிப்படியாக வளர்ந்து இப்போது இந்தப் பால் பண்ணையின் வருவாய் 24,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று கூறினார்ஜனவரி மாதத்தில், நாடு முழுவதிலுமிருந்து சுமார் 250 பால் பண்ணை சங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் மேலாண்மை இயக்குநர்களும் பனாஸ்கந்தாவிற்கு வந்து, கூட்டுறவு பால் பண்ணைத் துறையின் செயல்பாடுகளை நேரில் காண உள்ளனர் என்று அவர் கூறினார்.

குஜராத்தில் , உபரி நீர் மிகுதியாக உள்ள பகுதிகளிலிருந்து, நீரைத் திருப்பிவிடுவதன் மூலம் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு  நீர் கிடைப்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி செய்ததாக திரு அமித் ஷா கூறினார்நர்மதா, மாஹி நதிகளில் இருந்து உபரி நீர் பனாஸ்கந்தாவிற்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

பனாஸ் பால் பண்ணை தற்போது ஆசியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் பண்ணையாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். இது இப்போது இந்தியாவின் கூட்டுறவு இயக்கங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கூட்டுறவு இயக்கங்களுக்கும் ஊக்கமளிக்கிறது என்று திரு அமித் ஷா மேலும் குறிப்பிட்டார்.

இன்று பாபா சாஹேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார். பாபா சாஹேப் இந்த நாட்டிற்கு வழங்கிய அரசியலமைப்புச் சட்டம், தலித்துகள், ஏழைகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழக்கூடிய ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது என்று அவர் கூறினார். பாபா சாஹேப்பிற்கு மனமார்ந்த அஞ்சலியை செலுத்துவதாக அவர் தெரிவித்தார். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குஜராத் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான பாதயாத்திரையின் நிறைவு விழாவும் இன்று கொண்டாடப்படுவதை திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

கால்நடை வளர்ப்போர், பால் உற்பத்தியாளர்கள் ஆகியோரின் வருமானம், சுழற்சி பொருளாதார மாதிரி மூலம்  குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்கும் என்று திரு அமித் ஷா கூறினார். இதற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் பனாஸ் பால் பண்ணை தலைமையகம் இந்த திட்டமிடலின் மையமாக செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்பிரதமர் திரு நரேந்திர மோடி இரண்டாவது வெண்மைப் புரட்சிக்கு பல லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளதாகவும், தேசிய கால்நடை இயக்கம், கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், மறுசீரமைக்கப்பட்ட தேசிய பால் திட்டம், தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டம் ஆகியவை இரண்டாவது வெண்மைப் புரட்சியின் நான்கு தூண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தூண்களின் ஆதரவுடன் இரண்டாவது வெண்மைப் புரட்சி நிச்சயமாக வெற்றி பெறும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199832&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2199899) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Odia , Kannada