புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
प्रविष्टि तिथि:
06 DEC 2025 2:29PM by PIB Chennai
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தூய்மையான எரிசக்தி விரிவாக்கத்தை விளக்கிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, நடப்பு நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 31.25 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாகக் கூறினார். இதில் 24.28 ஜிகாவாட் சூரிய சக்தியும் அடங்கும். ஒடிசாவின் பூரியில் நடைபெற்ற உலகளாவிய எரிசக்தித் தலைவர்கள் உச்சி மாநாடு 2025-ல் பேசிய அமைச்சர், மாநிலம் முழுவதும் 7-8 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 1.5 லட்சம் கூரை சூரியசக்தி திட்டத்தையும் அறிவித்தார்.
2022-ம் ஆண்டில் 1 டெராவாட் ( 1000 ஜிகாவாட்) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட பிறகு, உலகம் 2024-ம் ஆண்டில் 2 டெராவாட்டை எட்டியது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்த உலகளாவிய எழுச்சிக்கு இந்தியா ஒரு முக்கிய உந்து சக்தியாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் சூரிய சக்தி திறன் 2.8 ஜிகாவாட்டிலிருந்து சுமார் 130 ஜிகாவாட்டாக வளர்ந்துள்ளது, இது 4,500% க்கும் அதிகமான அதிகரிப்பு ஆகும். 2022 மற்றும் 2024-க்கு இடையில் மட்டும், உலகளாவிய சூரிய சக்தி சேர்க்கைகளுக்கு இந்தியா 46 ஜிகாவாட் பங்களித்தது. இதன் மூலம் மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக இந்தியா மாறியது.
இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்டுள்ளது என்றும் நிலக்கரியின் இரண்டாவது பெரிய நுகர்வோர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். உலகளாவிய வழிமுறைகள் இப்போது தொழில்துறை போட்டித்தன்மையை வடிவமைத்து வருவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய இந்தியாவின் மாற்றம் இன்னும் முக்கியமானதாக மாறியுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199775®=3&lang=1
***
AD/PKV/RJ
(रिलीज़ आईडी: 2199861)
आगंतुक पटल : 9