PIB Headquarters
சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டங்கள்
प्रविष्टि तिथि:
06 DEC 2025 10:49AM by PIB Chennai
இந்தியாவின் சுரங்கத் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமான மூலப்பொருட்கள், ஏற்றுமதி ஆகியவை அரசுக்கு வருவாயை வழங்குகிறது. இந்தியப் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சியுடன், கனிம, சுரங்க வளங்களுக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சுரங்கத் தொழிலாளர்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக அரசு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அண்மைக் காலம் வரை, சுரங்கச் சட்டம்- 1952, அது தொடர்புடைய விதிமுறைகள் ஆகியவற்றின் மூலம் சுரங்கத் தொழிலாளர் நிலைமைகள் நிர்வகிக்கப்பட்டன. தற்போது புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய சட்டங்கள் சுரங்கத் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சுரங்கத் தொழிலில் வணிகம் செய்வதை எளிதாக்கவும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன் முக்கிய அம்சங்கள் சில:
- புதிய தொழிலாளர் சட்டங்கள் சுரங்கத் துறையில் தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்தி, இணக்கத்தை எளிதாக்கும் சூழலை ஏற்படுத்தும். இவை ஒழுங்குபடுத்தப்பட்ட பணி நேரங்கள், ஓய்வு இடைவெளிகள், நியாயமான இழப்பீடு ஆகிய முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளன.
- வருடாந்திர மருத்துவப் பரிசோதனைகள், பணியிடப் பாதுகாப்பு, நலத்திட்ட ஏற்பாடுகள் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன.
- தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் பரந்த பாதுகாப்பு வழங்கி சமூகப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- ஒருங்கிணைந்த பதிவு முறை, நெறிப்படுத்தப்பட்ட ஆய்வுகள், டிஜிட்டல் செயல்முறைகள் ஆகியவை இத்துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குகின்றன.
இந்த நடவடிக்கைகள், மிகவும் ஆதரவான, வசதியான பணியிட சூழலை உருவாக்குகின்றன. இதன் மூலம் சுரங்கத் துறையில் நீடித்த வளர்ச்சிக்கு இந்தியா அடித்தளம் அமைத்துள்ளது. புதிய தொழிலாளர் சட்டங்கள் சுரங்கத் தொழிலாளர்களுக்கு முறையான வேலை நேரம், சுகாதாரம், பாதுகாப்பு தரநிலைகள், சமூகப் பாதுகாப்பு, பாலின சமத்துவம் போன்றவற்றின் மூலம் அதிகாரம் அளிக்கும் ஒரு முழுமையான கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இவை நாட்டின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு வலுவாகப் பங்களிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199738®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2199780)
आगंतुक पटल : 10