PIB Headquarters
azadi ka amrit mahotsav

புதிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளிகளில் புதுமைகளை ஊக்குவித்தல்

प्रविष्टि तिथि: 05 DEC 2025 11:10AM by PIB Chennai

தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளால் நாட்டில் கல்வி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையானது, பன்முகத்தன்மை கொண்ட கல்விச் சூழலில் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்கிறது. 

மனப்பாடம் செய்வதிலிருந்து புரிதல் அடிப்படையிலான கல்விக்கு மாறுவதில் கவனம் செலுத்தப்படுகிறது., பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாணவர்களிடையே ஆய்வு மனப்பான்மையை வளர்க்கவும், புதுமை கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் நாடு முழுவதும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரவும், எதிர்காலத் தலைவர்களை உருவாக்கவும், புதிய தேசிய கல்விக் கொள்கை அனைத்து நிலைகளிலும் கற்பித்தல் முறைகளை நிறுவனமயமாக்குகிறது.

மேலும், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இந்த பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் 25 கோடிக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை சென்றடைகின்றன.  2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், கல்விக்காக 1,28,650 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 78,572 கோடி ரூபாய் பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாடத்திட்ட கட்டமைப்பால் பள்ளிக்கல்வியின் பல்வேறு நிலைகளுக்கான பாடத்திட்டத்தில் ஒட்டுமொத்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அடல் புதுமை இயக்கம் இளம் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது. மத்திய அரசின் அடல் புதுமைத் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், நாடு முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே ஆர்வத்தையும் புதுமையையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

அக்டோபர் 2025 நிலவரப்படி , பள்ளிகளில் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன, இதில் 1.1 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 2025-2026 காலகட்டத்தில் 50,000 ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையானது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முக்கிய பங்கு வகிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199237&reg=3&lang=1

***

SS/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2199335) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati