குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 3:22PM by PIB Chennai
18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, பேடிஎம், பேநியர்பை, பாரத்பே, போன்பே ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் மின்னணு பரிவர்த்தனை முறையில் ஊக்கத்தொகைகளை பெறுவதற்காக க்யூஆர் கோடை உருவாக்க இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதுவரை 6.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு 22 கோடி ரூபாய் அளவிற்கு மின்னணு பணப்பரிவர்த்தனை ஊக்கத்தொகைகள் அளிக்கப்பட்டுள்ளது. ஓஎன்டிசி, ஃபேப் இந்தியா, மீஷோ போன்ற மின்னணு வர்த்தக தளங்கள் மூலம் பிரதமரின் விஸ்கர்மா பயனாளிகளுக்கு ஆன்லைன் சந்தை வாய்ப்பு ஆதரவும் அளிக்கப்படுகிறது.
இத்தகவலை மக்களவையில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்த தொழில்துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198702®=3&lang=1
---
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2198972)
आगंतुक पटल : 6