நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் முறையான வர்த்தகத்தைப் பராமரிக்க வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சிறப்பாக செயல்படுகிறது – மத்திய இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி

प्रविष्टि तिथि: 04 DEC 2025 2:47PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் கீழ் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 68-வது நிறுவன தினக் கொண்டாட்டங்களை மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இந்தியாவின் பொருளாதார எல்லைகள் மற்றும் வர்த்தக உள்கட்டமைப்புகளை பாதுகாப்பதில் அதன் உறுதிப்பாட்டை பாராட்டினார். உலகளாவிய சவால்கள், தொழில்நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தை தாம் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

நேர்மையாக வரி செலுத்துவோர் கண்ணியத்துடன், வர்த்தகம் புரிவதை அரசு உறுதி செய்வதாக அவர் குறிப்பிட்டார். பின்னர் பேசிய மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியத்தலைவர் திரு. விவேக் சதுர்வேதி, முறையான வர்த்தகத்தை பாதுகாப்பதில் சிறப்பான நடவடிக்கைகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்டு வருவதாக பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சட்டவிரோத வர்த்தகம் பெரிய புலனாய்வு சாதனைகள் வளர்ந்து வரும் சவால்கள் கொள்கை பரிந்துரைகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198678&reg=3&lang=1   

***

AD/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2198830) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी